இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளியான அட்வென்ட்சரஸ் ஃபான்டசி திரைப்படம் தும்பா. தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சிறு சிறு வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டும் இளைஞராக வருகிறார் தர்ஷன். பின்பு பெயிண்ட்டர் தீனாவுடன் சேர்ந்து காட்டில் வேலை பார்க்க செல்கிறார் தர்ஷன். இதற்கிடையே காட்டில் படமெடுக்க விரும்பும் வைல்ட் லைஃப் புகைப்பட கலைஞராக வருகிறார் கீர்த்தி பாண்டியன். இந்த மூவரும் புலி இருக்கும் டாப் ஸ்லிப்பில் சந்தித்து என்ன செய்கிறார்கள் என்பது தான் கதைச்சுருக்கம். 

Thumba Movie Review Featuring Darshan Keerthy Pandian Dheena

வண விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதை மூலக்கருவாக கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர். அதை கூடுதல் கதாகலாட்சியத்துடன் கொண்டு சேர்த்திருக்கலாம். ஸ்கிரிப்ட்டில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சிறு வயதினரை அதிக அளவில் ஈர்க்கக்கூடிய விஷயங்கள் இருந்தாலும், படத்தில் வசனங்கள் சரியாக அமையவில்லை என்ற வருத்தம் உள்ளது. குறிப்பாக தர்ஷனின் நடிப்பு செயற்கையாகவே உள்ளது. நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தீனாவின் ஒன்லைன் கவுன்ட்டர் சில இடங்களில் ஒர்க்காகியுள்ளது. தனக்கு குடுத்த ரோலை சரியாக செய்துள்ளார் கீர்த்தி பாண்டியன். கதைக்கு ஏற்றவாறு நடித்துள்ளார்.

Thumba Movie Review Featuring Darshan Keerthy Pandian Dheena

அடர்ந்த வனப்பகுதியை திரையில் காண்பிக்கும் போது டாப் ஆங்கிள் மற்றும் லைட் இல்லாத இரவு நேர ஷாட்ஸில் திறமையாக செயல்படுவது மிகவும் முக்கியம். அதை சரியாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் நரேன். குறிப்பாக முதல் பாதியில் இரவு நேரத்தில் யானை துரத்தும் காட்சி சபாஷ்.

Thumba Movie Review Featuring Darshan Keerthy Pandian Dheena

எதார்த்தமாக நகரும் முதல் பாதி, விறுவிறுப்பாக நகரும் இரண்டாம் பாதி என கவர்கிறது தும்பா. படத்தில் மலைவாழ் மக்கள் காடு, விலங்கு மீது கொண்ட அன்பையும் சில காட்சிகளில் கொண்டுவந்தது பிரமாதம். ஜெயம் ரவியின் கௌரவ தோற்றம் கூடுதல் சுவையை தருகிறது என்றே கூறலாம். 

Thumba Movie Review Featuring Darshan Keerthy Pandian Dheena

CG எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல்கள் பலத்த வரவேற்பை தராவிட்டாலும், பின்னணி இசை ஓரளவுக்கு இருந்தது.

மொத்தத்தில் குழந்தைகள் ரசிக்கும் படமாக மட்டுமே அமைகிறது இந்த தும்பா.

கலாட்டா ரேட்டிங் - 2.5/5