கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த தொடர். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வந்தனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றிருந்தது.

இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனாவை அடுத்து விறுவிறுப்பாக சென்று வந்த திருமணம் தொடர் நிறைவு பெற்றது.நன்றாக சென்று கொண்டிருந்த தொடர் திடிரென்று நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை பெரிதும் மிஸ் செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்த தொடரின் மூலம் சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் மலர்ந்தது விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ஸ்ரேயா அஞ்சன் விஜய் டிவியின் தொடரின் ஹீரோயினாக சமீபத்தில் இணைந்தார்.இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

சித்து,ஸ்ரேயா இருவரும் அவ்வப்போது தங்கள் புகைப்படங்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார்கள்.தற்போது இருவரும் இணைந்து வெகுநாட்களுக்கு பிறகு ஒரு நடன வீடீயோவை பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.