மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.    

முதியவர் தோற்றத்தில் ஏற்கனவே வந்த சீதக்காதியின் முதல் போஸ்டர் பெரும் வரவேற்ப்பை பெற்றது. பிறகு வந்த இரண்டாம் லுக்கில் கையில் அம்புடன் கம்பீரமாக தோன்றினார் மக்கள் செல்வன்.

 

Third Look Poster Of Makkal Selvan Vijay Sethupathi From The Movie Seethakathi Directed By Balaji Tharaneetharan

 

விஜய்சேதுபதியின் 25-வது படமான இப்படத்தில் பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் சீதக்காதியின் மூன்றாம் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.   

டிசம்பர் 14-ம் தேதி வெளிவர காத்திருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.