தனி ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர் மோகன் ராஜா.முதலில் சில ரீமேக் படங்களை எடுத்து வந்தாலும் பின்னர் சமூக கருத்துள்ள படங்களை எடுக்க தொடங்கினார்.2015-ல் இவர் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Theri Update on Jayam Ravi Much Expected Thani Oruvan 2 Directed by Mohan Raja

ஜெயம் ரவி,நயன்தாரா,அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்று படத்தின் இயக்குனர் சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டார்.

Theri Update on Jayam Ravi Much Expected Thani Oruvan 2 Directed by Mohan Raja

தற்போது இந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதோடு தரமணி,தங்கமீன்கள் போன்ற படங்களை இயக்கிய ராம் இரண்டாம் பாகத்தை கவனமாக எடுக்குமாறு தன்னிடம் கூறியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Theri Update on Jayam Ravi Much Expected Thani Oruvan 2 Directed by Mohan Raja