“இதனால் தான் தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் நடித்தார்..” மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து அவரது சகோதரர் பகிர்ந்த தகவல் – வீடியோ உள்ளே..

யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரன் நடித்த காரணம் வீடியோ உள்ளே Raghuvaran  brother about late actor agreed to act in Yaaradi nee mohini | Galatta

கடந்த 2008 - ல் இயக்குனர் செல்வராகவன் எழுத்தில் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘யாரடி நீ மோகினி’ . இப்படத்தில் தனுஷ் , நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் ரகுவரன். கருணாஸ், காரத்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து வகையான விஷயங்களையும் கொண்டு பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளியாகி பட்டி தொட்டி எங்கிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. யுவன் ஷங்கர் ராஜா இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்நிலையில் மறைந்த பிரபல நடிகர் ரகுவரன் அவர்களின் சகோதரர் ரமேஷ் அவர்கள் நடிகர் ரகுவரன் அவர்களின் திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த யாரடி நீ மோகினி படம் நடிகர் ரகுவரனின் கடைசி படமாக அமைந்தது குறித்தும் அப்படம் குறித்தும் ரமேஷ் பேசுகையில், தனுஷ் சார் நீங்கதான் பண்ணனும் கேட்டார். அப்போ அவர் தோள் மேல கை போட்டு, ‘என் பையன் மாதிரி இருக்க கண்டிப்பா நான் பன்றேன்னுசொன்னார்.‌”  மேலும் தொடர்ந்து  "யாரடி நீ மோகினி படத்தோட டப்பிங்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வரும் போது கொஞ்சம் மன அழுத்தத்தோட தெரிஞ்சாரு. யார்கிட்டேயும் பேசாம.‌ எனக்கு அது பாக்க கஷ்டமா இருந்தது." என்றார் ரமேஷ்.

அதன்பின்னர்,  பெங்களூர் ல ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டு ஒரு பெண். கொஞ்சம் நேரத்தில கண்கலங்கினாங்க. அப்போ என்னனு கேட்டப்போ.. ‘எந்த நாயும் எனக்கு சோறு போட வேண்டாம்’ னு யாரடி நீ மோகினி ல ஒரு வசனம் பேசுவார் அதை நினைச்சு அழுதேன்னு அந்தம்மா சொன்னாங்க. அதை மறக்கவே மாட்டேன்” என்றார் ரமேஷ்.

மேலும் தொடர்ந்து ரகுவரனின் சகோதரர் ரமேஷ் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் அடங்கிய நேர்காணல் இதோ..

 

 

“தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணி..” வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட ரத்தமாரே பாடலின் Glimpse..
சினிமா

“தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணி..” வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட ரத்தமாரே பாடலின் Glimpse..

ரிலீஸுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’.. - மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்.. விவரம் உள்ளே..
சினிமா

ரிலீஸுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’.. - மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்.. விவரம் உள்ளே..

“மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி கடன் வாங்கினேனா?..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா.. – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

“மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி கடன் வாங்கினேனா?..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா.. – வைரலாகும் பதிவு உள்ளே..