'நான் பார்த்த முதல் தமிழ் படமே ரஜினி படம் தான்!'- ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பேசிய 'ஜெயிலர்' தமன்னா... என்ன படம் தெரியுமா? வீடியோ உள்ளே

நடிகை தமன்னா பார்த்த முதல் தமிழ் படம் ரஜினிகாந்தின் படையப்பா,rajinikanth in Padayappa is the first movie watched by tamannaah | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், தற்போது இயக்குனர் சுந்தர்.சி-யின் ஃபேவரட் சீரிஸான அரண்மனை சீரிஸ் படங்களின் நான்காவது பாகமாக உருவாகும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னா மலையாளத்தில் பான்த்ரா மற்றும் ஹிந்தியில் வேதா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.  ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் இணைந்து தெலுங்கில் போலா ஷங்கர் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி போலா ஷங்கர் படம் உலகெங்கும் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிகை தமன்னா நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். 

குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னாவின்  ஸ்டைலான நடனத்தில் வெளிவந்த காவாலா பாடல் தற்போது மிகப்பெரிய ட்ரெண்டிங் ஹிட் ஆகியிருக்கிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஆக்ஷன் ட்ரீட்டாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவான ஜெயிலர் ஷோகேஸ்  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற தமன்னா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை தமன்னா நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, “ஜெயிலர்… எல்லோருமே படத்திற்காக காத்திருக்கிறார்கள். அதுவும் காவாலா பாடல் உங்களுக்கே தெரியும்.. உங்களுக்கு கால் வருகிறது தமன்னா ஜெயிலர் படத்தில் நடிக்கிறீர்கள் என அந்த தருணம் எப்படி இருந்தது?” எனக் கேட்ட போது, 

“ரொம்பவும் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் நான் அப்போது மாலத்தீவுகளில் இருந்தேன் ரொம்ப அழகான ஒரு இடத்தில் இருந்தேன். மாலத்தீவு கூட இல்லை ஒரு கடற்கரை பகுதி… எனக்கு ஞாபகம் இருக்கிறது எனக்கு நெல்சன் சாரிடம் இருந்து கால் வந்தது... நிச்சயமாக! இது ரஜினி சார் படம். ஆரம்பத்தில் தனுஷ் சார் உடன் ஒரு படம் நடித்தேன் அந்தப் படத்தின் ஸ்கிரீனிங் சமயத்தில் முதல்முறையாக ரஜினி சாரை சந்தித்தேன். அப்போது அவர் மிகவும் சிம்பிளாகவும் ஸ்வீட்டாகவும் இருந்தார். அவர் எங்களையும் படத்தையும் ஆசிர்வதித்தார் படிக்காதவன் படம் அந்த சமயத்தில் பெரிய ஹிட் ஆனது. நிறைய பேருக்கு தெரியாது நான் பார்த்த முதல் தமிழ் படம் படையப்பா. அதுதான் என்னுடைய படங்களுக்கு நான் ரெஃபரன்ஸாக எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு சந்திரமுகி படம்… நான் எப்போதுமே ரஜினி சார் அவர்களை பார்த்து INSPIRE ஆகிருக்கிறேன். கண்டிப்பாக அவரோடு இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் அப்போது அது நடைபெறவில்லை." என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னாவின் அந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

'இந்த அன்பு மிகப்பெரிய சர்ப்ரைஸ்!'- வாரணம் ஆயிரம் தெலுங்கு ரீ-ரிலிஸை கொண்டாடிய ரசிகர்கள்... நன்றி தெரிவித்த சூர்யா!
சினிமா

'இந்த அன்பு மிகப்பெரிய சர்ப்ரைஸ்!'- வாரணம் ஆயிரம் தெலுங்கு ரீ-ரிலிஸை கொண்டாடிய ரசிகர்கள்... நன்றி தெரிவித்த சூர்யா!

தளபதி விஜய் மக்கள் இயக்கம் கேரளா நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜய் மக்கள் இயக்கம் கேரளா நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்! விவரம் உள்ளே

ரஜினிகாந்தின் ஜெயிலர் அலப்பறை: உலகின் என்டர்டெயின்மென்ட் தலைநகரத்தில் சூப்பர் ஸ்டார்... மாஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

ரஜினிகாந்தின் ஜெயிலர் அலப்பறை: உலகின் என்டர்டெயின்மென்ட் தலைநகரத்தில் சூப்பர் ஸ்டார்... மாஸ் அறிவிப்பு இதோ!