90ஸ் கிட்ஸின் Favourite அனிமேஷன் படங்களில் ஒன்று தி லயன் கிங்.1994ல் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படம் வசூல் சாதனை புரிந்திருந்தது.இந்த படத்தை முழுநீள படமாக எடுக்க டிஸ்னி முடிவு செய்து இந்த படத்தை தொடங்கியது.

The Lion King Tamil Trailer Released Officially Arvind Swamy Siddarth Aishwarya Rajesh

Jon Favreau இந்த படத்தை இயக்கியுள்ளார்.Hans Zimmer இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க டிஸ்னி அரவிந்த் சாமி,சித்தார்த்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை இந்த படத்தில் டப்பிங் பேச ஒப்பந்தம் செய்துள்ளது.

The Lion King Tamil Trailer Released Officially Arvind Swamy Siddarth Aishwarya Rajesh

இவர்களை தவிர ரோகினி,ரோபோ ஷங்கர்,மனோபாலா,சிங்கம்புலி உள்ளிட்டோரும் இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை டிஸ்னி இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.