தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கொரோனா நேரத்தில் நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.

தற்போது விஜயின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வேலாயுதம் பட விழாவில் நிருபர் ஒருவர் சிக்ஸ் பேக் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு விஜய் நகைச்சுவையாக அளித்த பதில் குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.