திரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகராக, இதயத்து அதிபதியாய் தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தனது 26 ஆண்டு கால நடிப்பால் 6 லிருந்து 60 வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது சீரான நடிப்பால், வீட்டில் ஓர் அங்கமாய் விளங்கிவருகிறார். 

சமீபத்தில் ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியொன்று வெளியானது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் கவியன், ரோஹித், அஸ்வின், கோகுல் மற்றும் சஞ்சய் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். இக்குறும்படத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் கால் பதிப்பாரா சஞ்சய் என்ற அன்பு நிறைந்த ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

தற்போது நடிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். தளபதி விஜய் போல அதே அமைதி கலந்த காந்த பார்வை, அலட்டி கொள்ளாத இயல்பை வெளிப்படுத்துகிறார் சஞ்சய். இவர் விரைவில் திரையுலகில் கால்பதித்து தனது தந்தைக்கும், தமிழ் திரைக்கும் பெருமை சேர்த்திட கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.