பிரபாஸ், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட ‘புரோஜெக்ட் கே’ டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான Glimpse இதோ..

பிரபாஸின் புரோஜக்ட் கே படத்தின் டைட்டில் வெளியானது – Prabhas Project k titled Kalki 2898 glimpse out now | Galatta

இந்திய சினிமாவில் அடுத்தக் கட்ட நகர்வாக இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகும் திரைப்படம் ‘புரோஜக்ட் கே’. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் நாயகனாக பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் தீஷா பத்தானி, பசுபதி. அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டும் விதத்தில் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கவுள்ளார்.  வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை மகாநடி இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜோர்ஜே ஸ்டோஜில்கோவிக் ஒளிப்பதிவு செய்ய பின்னணி இசையமைக்கின்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

பிரம்மாண்ட பொருட்செலவில் Sci Fi கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களுக்கு படக்குழு சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. அதன்படி தற்போது படக்குழு புரோஜெக்ட் கே படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பிரபல காமிக் கான் பன்னாட்டு விழாவில் இந்தியாவின் முதல் திரைப்படமாக பிரபாஸின் புரோஜக்ட் கே திரைப்படம் மேடையேறியது. இந்த விழாவிற்கு உலகநாயகன் கமல் ஹாசன், பிரபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ப்ரோஜக்ட் கே படத்தின் டைட்டிலை சிறப்பு வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

𝐏𝐑𝐎𝐉𝐄𝐂𝐓-𝐊 is now #Kalki2898AD 💥

Here's a small glimpse into our world: https://t.co/3vkH1VpZgP#Prabhas @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 20, 2023

அதன்படி பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புரோஜக்ட் கே படத்தின் டைட்டில் ‘கல்கி 2898 AD’ என்று வைக்கப் பட்டுள்ளது. ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபாஸ் இந்து சமய இதிகாசங்களை தழுவி பட டைட்டில் அமைந்துள்ளது. கல்கி என்பது இந்து சமய கூற்றுப்படி விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகும். இதுவே விஷ்ணுவின் கடைசி அவதாரம் என்றும் இந்த அவதாரத்தில் விஷ்ணு கலியுகத்தில் தோன்றி தீயவைகளை அழிப்பார் என்பது பொருள். அதன்படி எதிர்காலத்தில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக பிரபாஸ் கல்கியாக அவதாரம் எடுத்து அதகளம் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அட்டகாசமான ஆக்ஷன் கட்சிகளுடன் வியப்பில் ஆழ்த்தும் விஷயங்களை இந்த சிறப்பு முனோட்டம் பெற்று தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் வீடியோவில் உலகநாயகன் கமல் ஹாசன் காட்சி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆதிபுருஷ் படத்தின் அறிவிப்பிலிருந்து ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்ட பிரபாஸ் கல்கி படத்தின் முதல் பார்வையிலும் ட்ரோல் செய்யப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள சிறப்பு வீடியோ பெரும்பாலும் வரவேற்பை பெற்று வருகிறது. நிச்சயம் பிரபாஸ் திரைபயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் புரோஜக்ட் கே திரைப்படம் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உலகமெங்கும் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

 

“இது ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் குரலாக இருந்தது..” சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழுவினரை பாராட்டிய திருமாவளவன்..
சினிமா

“இது ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் குரலாக இருந்தது..” சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழுவினரை பாராட்டிய திருமாவளவன்..

'கடல் ராசா முதல் நெஞ்சே எழு வரை..'  மரியான் 10 ஆண்டு நிறைவை படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்..!
சினிமா

'கடல் ராசா முதல் நெஞ்சே எழு வரை..' மரியான் 10 ஆண்டு நிறைவை படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்..!

படங்களில் நடித்து முடித்த கையோடு ஆன்மீக பயணத்தில் நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

படங்களில் நடித்து முடித்த கையோடு ஆன்மீக பயணத்தில் நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..