2019-ல் ரிலீசாக உள்ள படங்களில் மிகவும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது.

Thalapathy Vijay Jersey Number in Thalapathy 63 Revealed Directed by Atlee

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.கதிர்,யோகி பாபு,விவேக்,ஆனந்த் ராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது .ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Jersey Number in Thalapathy 63 Revealed Directed by Atlee

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ள இந்த படம் வரும் 2019 தீபாவளியன்று திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறாரா அல்லது கால்பந்து வீரராக நடிக்கிறாரா போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.இதில் தளபதி விஜயின் பெயர் மைக்கேல் என்ற தகவலும் கிடைத்திருந்தது.

Thalapathy Vijay Jersey Number in Thalapathy 63 Revealed Directed by Atlee

தற்போது விஜய் படத்தில் அணியும் ஜெர்சி நம்பர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் 5ஆம் நம்பர் ஜெர்சியுடன் படத்தில் தோன்றுவார் என நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.முன்னதாக கில்லி படத்தில் 10ஆம் நம்பர் ஜெர்சி அணிந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay Jersey Number in Thalapathy 63 Revealed Directed by Atlee

இதையடுத்து நிச்சயமாக தளபதி ஒரு கால்பந்தாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.