"தீப்பொறி பறக்கும் தெறியான விருந்து!"- தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட மிரட்டலான தமிழ் போஸ்டர் இதோ!

தளபதி விஜயின் லியோ பட அதிரடியான புதிய போஸ்டர் வெளியீடு,Thalapathy vijay in leo movie tamil poster out now | Galatta

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2வது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.  தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை உலக அளவில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியின் VFX பணிகள் அனைத்தும் தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ரிலீஸ் வரையில் தொடர்ச்சியாக லியோ படத்தின் அப்டேட்டுகள் வரும் என சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு லியோ படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்தன. நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி ஒரு புதிய போஸ்டர் வெளிவர இருந்த நிலையில் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மறைவு காரணமாக அந்த போஸ்டர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி இன்று செப்டம்பர் 20ஆம் தேதி லியோ திரைப்படத்திலிருந்து பொறி பறக்கும் மிரட்டலான புதிய போஸ்டர் வெளிவந்துள்ளது. முதல் முதலில் வந்த லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவான பிளடி ஸ்வீட் வீடியோவில் தளபதி விஜய் பட்டறையில் கத்தி செய்வது போலவே பொறி பறக்கும் மிரட்டலான தமிழ் போஸ்டரை லியோ பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த புதிய லியோ தமிழ் போஸ்டர் இதோ...
 

KEEP CALM AND PREPARE FOR BATTLE

மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து 🔥#LeoPosterFeast #LeoTamilPoster#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficialpic.twitter.com/6rHSifDzxm

— Seven Screen Studio (@7screenstudio) September 20, 2023