“என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட்..!”- MYOSITIS காரணமாக ஓய்வில் இருக்கும் சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்த முக்கிய அப்டேட்!

ஓய்வில் இருக்கும் சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்த முக்கிய அப்டேட்,samantha opens about her next projects in instagram | Galatta

தனது திரைப்படத்தில் தற்போது சிறிய இடைவெளி எடுத்திருக்கும் நடிகை சமந்தா தனது அடுத்தடுத்த பிராஜெக்ட்கள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ACTION PACKED சைட்டாடெல் வெப் சீரிஸ் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து கதாநாயகியாக நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உயர்ந்த சமந்தா தொடர்ந்து தரமான கதை களங்களையும் பல விதமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வந்த குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 

முன்னதாக ஹாலிவுட்டில் இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் அரேஞ்மெண்ட்ஸ் ஆப் லவ் எனும் ஆங்கில திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ள சமந்தா இதனிடையே தற்போது சைட்டாடெல் எனும் சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் வெப் சீரிஸில் நடித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே ஆகியோரின் ஃபேமிலி மேன்-2 வெப் சீரிஸில் அதிரடியாக நடித்து மிரட்டிய சமந்தா மீண்டும் இவர்களது கூட்டணியில் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவர இருக்கும் சைட்டாடெல் வெப் சீரிஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் & தி க்ரே மேன் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்களின் ஹாலிவுட் வெப் சீரிஸான சைட்டாடெல் வெப் சீரிஸில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த வெப் சீரீஸின் இந்திய வெர்ஷனாக இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கும் சைட்டாடெல் வெப் சீரிஸில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடிகை சமந்தா நடித்துள்ளார். வெகு விரைவில் இந்த அதிரடி வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர இருக்கிறது.

சமீப காலமாக MYOSISTIS நோயால் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார். இதில் இருந்து மீண்டு வருவதற்காக தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு வரும் நடிகை சமந்தா அதன் ஒரு பகுதியாக தற்போது நடிப்பதிலிருந்து சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு தனது உடல் நலனில் அக்கறை காட்டி வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களோடு அவ்வப்போது பல விஷயங்களை பகிர்ந்து வரும் நடிகை சமந்தா #AskMeAnything என்ற HASHTAGல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் அந்த வகையில் சமந்தாவின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, "என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் என்று ஒன்றும் இல்லை என்னிடம் எந்த திட்டமும் இல்லை பார்க்கலாம் இனிமேல் கொஞ்சம் செலெக்ட்டிவாக சில படங்களை எடுத்து பணியாற்றலாம் என இருக்கிறேன் என்னுடைய COMFORT ZONEலிருந்து வெளியில் வந்து பண்ண வேண்டும் என்று இருக்கிறேன் எனவே அப்படி ஒரு கதாபாத்திரம் கிடைக்கும் வரை காத்திருப்பது எனக்கு ஓகே!" . என பதில் அளித்திருக்கிறார். எனவே விரைவில் முற்றிலுமாக பூரண குணமடைந்து சமந்தா மீண்டும் தனது அடுத்தடுத்த அட்டகாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

' @Samanthaprabhu2 about her next project 🌟#Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/FWH5ylY2Hx

— SAM ARMY || KnowUrStarSAM™ (@KnowUrStarSAM) September 19, 2023