'விடாமுயற்சி' படத்தில் அஜித்குமார் உடன் இணைகிறாரா 'லியோ' நடிகர் சஞ்சய் தத்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்!

வைரலாகும் அஜித் குமாருடன் சஞ்சய் தத் இருக்கும் புகைப்படம்,ajith kumar meets sanjay dutt at dubai | Galatta

நடிகர் அஜித் குமார் உடன் தளபதி விஜய் படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டவர் நடிகர் அஜித் குமார். அந்த வகையில் முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனது திரைப் பயணத்தில் 62 வது திரைப்படமாக அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க இருக்கிறார். கடந்த ஜூலை மாதத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படத்தின் ஸ்கிரிப்ட் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் மகிழ் திருமேணி அவர்கள் அதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக விடாமுயற்சி படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். காத்திருந்த ரசிகர்கள் அனைவரையும் திருப்தி படுத்தும் வகையில் அதிரடியான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளிவரும் என சோசியல் மீடியாவும் காத்திருக்கிறது.

இதனிடையே தற்போது நடிகர் அஜித்குமாரை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் துபாயில் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சஞ்சய் தத், கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் மூலம் தென் இந்திய சினிமாவில் களமிறங்கி தற்போது தளபதி விஜயின் லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பக்கா ஆக்சன் பிளாக் படமாக தயாராகி இருக்கும் லியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்குமார் உடன் சஞ்சய் தத் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருப்பதால் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்திலும் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக உற்சாகமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ…
 

A Powerhouse Encounter!🔥

Latest Pic Of Ajithkumar with Sanjay Dutt!😍#Ajithkumar #SanjayDutt #AK #LEO #VidaaMuyarchi #Ajith #Galatta pic.twitter.com/DSoOcHlsNb

— Galatta Media (@galattadotcom) September 19, 2023