"கொஞ்சம் SHYஆ இருந்துச்சு!"- மார்க் ஆண்டனியில் 'சில்க் ஸ்மிதா'வாக நடித்த விஷ்ணு பிரியாவின் ஸ்பெஷல் பேட்டி! சுவாரஸ்யமான வீடியோ

மார்க் ஆண்டனியில் சில்க் ஸ்மிதாவாக நடித்த விஷ்ணு பிரியாவின் பேட்டி,Mark antony actress vishnu priya about silk smitha costume | Galatta

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் மார்க் ஆண்டனி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் தான் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக வந்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரிலீஸ் க்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகையாக கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதாவை நடிக்க வைத்திருக்கின்றனர். சில்க் ஸ்மிதாவின் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு  நடிகையை நடிக்க வைத்து CGI முறையில் சில்க் ஸ்மிதாவை பட குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த நடிகை விஷ்ணு பிரியா, மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த போது கொடுக்கப்பட்ட காஸ்டியூம் குறித்து பேசியபோது, "முதலில் லுக் டெஸ்ட் நிறைய எடுத்தார்கள். புடவையில் லுக் டெஸ்ட் எடுத்து விட்டு எடை கொஞ்சம் குறைக்க சொன்னார்கள் இந்த படம் நான் நடித்து 8 மாதங்கள் ஆகிவிட்டது இப்போது தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது அப்போது நீங்கள் எக்ஸ்பிரஷன் மட்டும் கொடுங்கள் டயலாக் டப்பிங் கொடுப்பார்கள் என்றார்கள் ஷூட்டிங் என்பது ஆதிக் ரவிச்சந்திரன் சார் எனக்கு வசனங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் அவர் அப்படியே நடித்துக் காட்டி சொல்லிக் கொடுப்பார் அதை அப்படியே சொல்லிவிடுவேன். காஸ்டியூம் முதலில் எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. “முதலில் நீங்கள் புடவையில் தான் நிறைய லுக் டெஸ்ட் எடுத்தீர்கள் திடீரென இப்படி ஒரு காஸ்ட்யூம் இருக்கிறது” என கேட்டேன் அந்தக் காஸ்டியூமும் ஓகே தான் ஆனாலும் எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது எனவே “அந்த புடவையை எடுத்து வாருங்கள்” என்று சொன்னேன் பின்னர் “இந்த உடை நன்றாகத்தான் இருக்கிறது உங்களுக்கு தான் அப்படி தெரிகிறது” என என்னை சம்மதிக்க வைத்தார்கள் முதல் இரண்டு நாட்களில் நான் அப்படி உணர்ந்தாலும் அடுத்த 4 - 5வது நாட்களில் எனக்கு கொஞ்சம் நார்மல் ஆகிவிட்டது." என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை விஷ்ணுபிரியாவின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.