லியோ: தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடி ஆக்சன் படத்திலிருந்து வெளியான துள்ளலான “நா ரெடி” வீடியோ பாடல் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து நா ரெடி வீடியோ பாடல் வெளியீடு,thalapathy vijay in leo movie naa ready video song out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து "நா ரெடி" வீடியோ பாடல் வெளியானது.லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த "நா ரெடி" பாடலை தளபதி விஜய் பாடியிருக்கிறார். அனிருத் இசையில் பக்கா துள்ளலான வந்த இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். இதன் ராப் பகுதியை அசல் கோளார் எழுதி பாடியிருக்கிறார். லியோ படத்தின் ரிலீஸ்க்கு முன்பு வந்த நான் ரெடி பாடலின் லிரிக்கல் வீடியோவே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பாக நிறைய சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் போதைப் பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கத்தை தூண்டும் வகையிலான பாடல் வரிகள் இருப்பதாக எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன. இதை அடுத்து சென்சாரில் இந்த பாடலில் சில வரிகள் நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் பேசிய தளபதி விஜய் இந்த பாடலை ரசிகர்கள் முன்பு பாடி அதன் வரிகளுக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும்படியும் இந்த பாடலின் வரிகளை வேறு அர்த்தங்கள் சொல்லி மழுப்ப விரும்பவில்லை எனவும் பேசினார். தினேஷ் மாஸ்டரின் அட்டகாசமான நடன இயக்கத்தில் ஆயிரம் நடன கலைஞர்களோடு இணைந்து தளபதி விஜய் மிரட்டலாக நடனமாடிய லியோ திரைப்படத்தின் “நா ரெடி” வீடியோ பாடல் இதோ...

 

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி விஜய் - திரிஷா ஜோடி இணைந்து நடித்துள்ளது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். 

இந்திய சினிமா வியந்து பார்க்கும் வகையில் முதல் நாளிலேயே அதிகபட்ச வசூல் செய்த படமாக லியோ திரைப்படம் 148.75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்த லியோ திரைப்படம் முதல் வார இறுதியில் 461 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கும் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 201 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மற்றொரு வரலாற்று சாதனையையும்  படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.