தமிழ் சினிமாவின் ரசிகர் படையாளும் நடிகர் தளபதி விஜய். திரையுலகின் முடிசூடா மன்னன் என்பதை தாண்டி ரசிகர்களுக்கு உடன் பிறவா அன்னன் எனும் அந்தஸ்தை பெற்றவர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63 படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராய் தோன்றி அசத்தினார். 

அண்ணன் சஞ்சயை தொடர்ந்து தற்போது தங்கை சாஷாவும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தளபதி விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். சாஷா படிப்பை தாண்டி பேட்மிண்டன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது அவர் இடம்பெற்ற பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளதாம். இந்த தகவலை அவரின் பள்ளி நிர்வாகமே முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.