லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். 

மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. 

அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார். 

கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தியேட்டர்களை திறக்கவும் தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்துள்ளது. இதில், தமிழகம் உள்பட அனைத்து மாநில தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். விரைவில் நல்ல செய்தி வரும் என திரையரங்க உரிமையாளர்களும், தளபதி ரசிகர்களும் ஆவலில் உள்ளனர். 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் கேக் தந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படக்குழுவில் உள்ளவரின் பிறந்தநாள் போல் தெரிகிறது. அருகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பது தெரிகிறது. மாஸ்டர் டீஸர் அல்லது ட்ரைலர் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களின் ரசனைக்கு இது மாதிரி வீடியோக்களே தீனி போடுகிறது.