"தினமும் 4-5 மணி நேரம் மேக்கப்"- சீயான் விக்ரமின் தங்கலான் பட சவால்கள் பற்றி மாளவிகா மோகனன் பதிவு! வைரல் புகைப்படங்கள் உள்ளே

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்,malavika mohanan shared shooting spot video from thangalaan | Galatta

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரமின் அடுத்த மிரட்டலான படமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தின் மேக்கப் குறித்த சவால்கள் பற்றி நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆகச் சிறந்த இயக்குனரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் தங்கலான். முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்த நடிகர் சீயான் விக்ரம் தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்திருப்பதாக தெரிகிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் தங்கலான் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் வேறு விதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.

சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அந்த வகையில் முன்னதாக சீயோன் விக்ரமின் பிறந்த நாள் தினத்தன்று வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சில நாட்களுக்கு தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இதனிடையே சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இன்னும் கடைசியாக 20 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். 

அந்த வகையில் தங்கலான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான மேக்கப்பில் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மாளவிக்கா மோகனன். “தினமும் 4-5 நேரங்கள் மேக்கப்க்காகவும் ஆடைக்காகவும் ஒதுக்க வேண்டிய ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் நடிக்கும் பொழுது உங்கள் போனில் இருக்கும் பல ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இப்படித்தான் இருக்கும்” என தெரிவித்து கீழே தங்கலான் என குறிப்பிட்டு அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மாளவிகா மோகனின் தங்கலான் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

When you’re playing a character which needs 4-5 hours of makeup & costume time daily(sitting still for that long has been the biggest challenge, yes😅), most of the BTS photos on your camera roll tend to be these 🌝#Thangalaan
♥️ pic.twitter.com/SwemWQq1vZ

— Malavika Mohanan (@MalavikaM_) June 21, 2023

'இயக்குனர் நெல்சனின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஸ்பெஷல் மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

'இயக்குனர் நெல்சனின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஸ்பெஷல் மேக்கிங் வீடியோ இதோ!

'ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ஷூட்டிங் ஓவர்!'- லைகா ப்ரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

'ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ஷூட்டிங் ஓவர்!'- லைகா ப்ரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான லேட்டஸ்ட் அப்டேட்!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான லேட்டஸ்ட் அப்டேட்!