ரீ-ரிலீஸ் செய்யப்படும் தளபதியின் பிகில் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | October 23, 2020 18:16 PM IST
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மா
பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.கதிர்,விவேக்,
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிகளை வசூல் செய்தது.கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது பிகில்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் செம ரீச்சை பெற்றிருந்தன.ஆல்பம் வெளியான அனைத்து தளங்களிலும் சூப்பர்ஹிட் முடித்திருந்தது.
இந்த படத்தில் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருந்தார்.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப்பில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புடைத்திருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள்,திரையரங்குகள் உள்ளிட்டவை எதுவும் நடைபெறாமல் இருந்தன.சில இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து திரையங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.சில இடங்களில் பிகில் திரையிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பாதி ரசிகர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன.புதுச்சேரியிலும் திரையரங்குகள் கடந்த 15ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது.இன்று முதல் புதுவையில் பிகில் திரையிடப்படுகிறது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Puducherry has started reopening cinemas. The first Tamil content to release in the U.T after the months-long shut down due to coronavirus is none other than Thalapathy #Vijay's #Bigil. A re-release on the occasion of movie's first year anniversary! 😎 #Master @actorvijay pic.twitter.com/oBLqpHYwwf
— Vijay Fans Pride (@VijayFansPride) October 23, 2020
Suriya's Soorarai Pottru New Video Song | GV Prakash | Aagasam
23/10/2020 05:25 PM
K. G. F: Chapter 1 re-release plans - official announcement!
23/10/2020 04:05 PM
Goundamani's health condition rumours clarification - official statement here!
23/10/2020 04:05 PM
Nayanthara's Mookuthi Amman goes for a direct OTT release | Grand Diwali release
23/10/2020 04:00 PM