ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தம்பதிகளாக வேலை பார்த்து வந்தனர். இந்த 

இந்த சூழலில் தான், இந்த தொழிலாளர் தம்பதியினரான அந்த பெண் கர்ப்பமான நிலையில், அந்த தம்பதியினர் அங்குள்ள பாபட்லா மாவட்டத்தில் உள்ள ராப்பள்ளே என்ற ரயில் நிலையத்தில், குன்டூரில் இருந்து கிளம்பிய ரயிலில் ராப்பள்ளே ரயில் நிலையத்திற்கு கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் வந்து உள்ளனர்.

பின்னர், அவர்கள் அடுத்த ரயிலுக்காக காத்திருந்த நிலையில், இந்த தம்பதியினர் அந்த ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்மில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். 

அப்போது, இரவு நேரத்தில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், தூங்கிக்கொண்டிருந்த அந்த கணவரை எழுப்பி “மணி என்ன?” என்று, கேட்டு உள்ளனர்.

ஆனால், அதற்கு அந்த கணவன் தூக்கத்தில் இருந்து எழுந்து “என்னிடம் கடிகாரம் இல்லை” என்று, பதில் அளித்த நிலையில், அந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த கணவரை அடித்து துன்புறுத்தியதுடன், அவரிடம் இருந்த 750 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு, அங்கிருந்து விரட்டி அடித்து உள்ளனர்.

அவர் உதவி கேட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில், அவரின் கர்ப்பிணி மனைவியையும் தாக்கிய அந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த பெண் கர்ப்பிணி என்று கூட, இறக்கம் காட்டாமல், அந்த பெண்ணை 3 பேருமாக சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அதே நேரத்தில், உதவி கேட்டுச் சென்ற அந்த கணவன், அங்குள்ள ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி, உதவி கேட்டு உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர். ஆனால், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். 

அத்துடன், கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார், உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். மோப்ப நாய் உதவியுடனும், அங்கிருந்த சிசிடிவி உதவியுடனும் விசாரணை நடத்தி, தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இப்படி, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, குற்றச் செயலில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

குறிப்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர் என்றும், அவர் மீது ஏற்கனவே 3 திருட்டு வழக்கு நிலுவையில்  உள்ளதாகவுமு் கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த 3 பேர் மீதும் கூட்டுப் பாலியல் பலாத்காரம், திருட்டு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், இந்த பலாத்கார சம்பவத்திற்கு அந்த மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் வி.பத்மா, தனது கண்டனத்தையும், கவலையும் பதிவு செய்து உள்ளார். இச்சம்பவம், தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.