ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி அதிரடியாக நீட்கப்பட்ட நிலையில், பகீர் திருப்பமாக சிறுமியின் உறவினரே கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன்- கவுசல்யா தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஜோனின் என்ற மகனும், 11 வயதில் மவுலீசா என்ற மகளும் உள்ளனர். 11 வயதான மவுலீசா, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். அதே போல், 14 வயதான சிறுவனும் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

இந்த சூழலில் தான், சிறுமியின் தந்தை சரவணன் வேலை விசயமாக வெளியூர் சென்ற நிலையில், கவுசல்யா தனது 11 வயது மகளுடன், மகனுடனும் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது, அதிகாலை நேரத்தில் அந்த வீட்டிறகுள் அத்து மீறி நுழைந்த முகமூடி அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், அவரது தாய் கவுசல்யா மற்றும் சிறுமியின் அண்ணனை கட்டிப் போட்டு விட்டு, அந்த சிறுமியை கடத்திச் சென்று உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியைத் கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள், “50 லட்சம் பணம் கேட்டு, சிறுமியின் தாயாருக்கு மிரட்டல்” விடுத்து உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். 

குறிப்பாக, இந்த வழக்கில் சிறுமியை மீட்கும் முயற்சியாக 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் அலங்காநத்தம் பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் படியாக சிறுமியுடன் சென்ற தம்பதியரை, அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் வழி மறித்து விசாரித்து உள்ளனர்.

போலீசாரின் இந்த தீவிர விசாரணையில், சிறுமியுடன் சென்றவர்கள் மாறி மாறி பதில் அளித்து உள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், சிறுமியிடம் விசாரித்த போது, அவர்கள் அந்த சிறுமியை கடத்திச் சென்றவர்கள் என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து அதிரடியாக சிறுமியை மீட்டு போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற அவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சிறுமியை கடத்திய அவர்கள் இருவரும், அதே ஊரைச் சேர்ந்த கணவன் மணிகண்டன் - மனைவி பொன்னுமணி” என தெரிய வந்தது.

அத்துடன், உறவினர்களான இவர்கள் இருவரும் சேர்ந்துதான், அந்த 11 வயது சிறுமியை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. 

முக்கியமாக, “பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில், சிறுமி கடத்தப்பட்டதாக” போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், சிறுமியை கடத்தியது, அந்த சிறுமியின் உறவினர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், “இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்ப்பு இருக்கிறதா?” என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.