ட்விட்டர் இந்தியாவில் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலர் பயன்படுத்தும் முக்க்கிய சமூகவலைத்தளங்களில் ஒன்று.ட்விட்டரில் நம்பத்தக்க செய்திகள் விரைவில் கிடைப்பதால் பலரும் ட்விட்டர் பயன்படுத்துவதை விரும்புவார்கள்,அதோடு பிரபலங்களுடனும் பேசும் வாய்ப்புகள் சிலநேரம் கிடைக்கும்.

ட்விட்டர் கடந்த சில வருடங்களாக அதிகம் ட்வீட்  விஷயங்களை ட்ராக் செய்து ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தனர்.கடந்த சில வருடங்களாக தென்னிந்திய படங்கள் இந்த லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.இந்த வருடத்திற்கான லிஸ்டை இன்று வெளியிடவுள்ளதாக ட்விட்டர் இந்தியா அறிவித்திருந்தது.இதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக விராட் கோஹ்லி அப்பாவாக போவதாக பதிவிட்ட ட்வீட் உள்ளது,அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டதாக தளபதி விஜயின் நெய்வேலி செல்பி உள்ளது மற்றும் அதிகம் மேற்கோள் செய்யப்பட்ட ட்வீட்டாக அமிதாப் பச்சனின் கொரோனா ட்வீட் உள்ளது.அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களாக தில் பேச்சரா,சூரரைப் போற்று மற்றும் Sarileru Neekevaru படங்கள் உள்ளன.

மாஸ்டர்,வலிமை உள்ளிட்ட முக்கிய படங்களின் ஹாஸ்டேக் இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டர் இந்தியா தங்கள் ட்வீட்யிலேயே தெளிவுபடுத்தியுள்ளனர்.2020-ல் வெளியான படங்களின் கணக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.