தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். சமீபத்தில் நடிகர் யோகிபாபு, கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தில் தளபதி விஜய்யின் பெயர் மைக்கேல் என்ற செய்தி வெளியாகியது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Thalapathy Sixty Three Movie Intro Song Shooting Kick Starts Said By Close Sources

தற்போது சென்னை பின்னி மில்லில் செட் அமைக்கப்பட்டு இன்ட்ரோ பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருவதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவான இந்த பாடல் லோக்கல் மற்றும் அர்பன் சாயலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று துவங்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

Thalapathy Sixty Three Movie Intro Song Shooting Kick Starts Said By Close Sources