பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,மாஸ்டர் மஹேந்திரன்,பிரிகிடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர்.துப்பாக்கி,கத்தி,சர்கார் என மூன்று வெற்றி படங்களை விஜய்க்கு கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய முருகதாஸ்,இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஒரு ஹிண்ட் கொடுத்தார்.கிட்டத்தட்ட இந்த படத்தை உறுதிசெய்துள்ளார் முருகதாஸ்.மேலும் இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இதுகுறித்து தெளிவுபடுத்திய முருகதாஸ் தளபதி 65 படம் எந்த படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.ஒரு புதிய கதையாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.