பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,மாஸ்டர் மஹேந்திரன்,பிரிகிடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல்கள் ஓயாது ஒளித்து வருகின்றன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் படங்களை OTT-யில் வெளியிட்டு வந்தனர்.இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இருந்தாலும் தற்போதுள்ள சூழல் காரணமாக சில படங்கள் OTT-யில் வெளியாகின.

பொன்மகள் வந்தாள்,பென்குயின் உள்ளிட்ட சில படங்கள் நேரடியாக OTT-யில் வெளியானது.சில நாட்களுக்கு முன் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம்மில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.ஒரு பெரிய நடிகரின் படம் OTT-யில் வெளியாவதை கேட்டு பலரும் ஆச்சரியப்பட்டனர்,பலர் அதிர்ச்சியிலும் இருந்தனர்.

சூரரைப் போற்று திரைப்படம் ஒரு தொடக்கம் தான் இன்னும் பல படங்கள் வெளியாகவுள்ளன என்று தகவல்கள் பரவி வந்தன.மாஸ்டர் படம் OTT-யில் வெளியாகவுள்ளது என்று ரிலீஸ் தேதியுடன் ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவி வந்தது,இதுகுறித்து விசாரித்தபோது இந்த போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டது இல்லை என்றும் ,மாஸ்டர் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

vijay master not releasing in ott fake poster clarification here