தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. முன்பு ரசிகர்களின் அலைமோதல் காரணம் கருதி ஹைதெராபாத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். சமீபத்தில் நடிகர் யோகிபாபு, கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி நடிப்பது உறுதியாகிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு 21-ம் துவங்கி நடந்து வருகிறது.

தற்போது சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்டில் ஷூட்டிங் நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு 55 நாட்கள் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Thalapathy 63 Shooting Schedule Update From The Sets In Binny Mills