தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். நயன்தாராவை தொடர்ந்து, மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியது. இவர்களுடன் சின்ன கலைவாணர் விவேக் நடிக்கிறார்.

தற்போது இவர் Greenkalam.org என்ற வெப்சைட்டை வெளியிட்டார். இதை இந்தியாவின் பெருமைக்குரிய நபரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இதில் அவர் குறித்தும் அவரது மரம் நடும் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்று பதிவிட்டிருக்கிறார். நடிகர் விவேக்கின் சமூக அக்கறை கொண்ட இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.