தமிழ் சினிமாவின் சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பட்டியலில் நடிகர் டேனியல் பாலாஜிக்கு என இடமுண்டு. வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. 

Thalapathy 63 Actor Daniel Balaji Invited Everyone For March 13 Temple Function

படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் சிறந்த மனிதர் டேனியல். இவர் வரும் மார்ச் 13-ம் தேதி சென்னை ஆவடியில், ரக்தூல் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

AGS நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கும் தளபதி 63 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது கூடுதல் தகவல். இறை நம்பிக்கை உள்ள டேனியல் பாலாஜியின் இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.

Thalapathy 63 Actor Daniel Balaji Invited Everyone For March 13 Temple Function