சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சி பற்றி கலாட்டா பேட்டியில் பேசியவர், தல அஜித்தின் சிறப்பான பங்காற்றல் குறித்து பேசினார்.

தான் சினிமா துறைக்கு வருவதற்கு காரணம் தளபதி விஜய் என்று கூறியுள்ளார். அவரோட செய்கைகள், அணுகுமுறை மிகவும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார். எவ்வித காட்சியாக இருந்தாலும் தளபதி தயக்கமின்றி செய்வார் என்று தெரிவித்தார். தெறி படத்தில் இருக்கும் டிராஃபிக் சண்டை காட்சி மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.