சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது.

தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் இதுவரை வெளியான வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வெற்றி, விஸ்வாசம் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது நாம் அறிந்தவயே.

தற்போது அவர், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா இயக்கத்தில் வெளியான கனா படம் பார்த்துவிட்டு, இன்றைய விவசாயிகள் நிலையை பட்டவர்த்தனமாக சொல்லிய விதத்திலும் பெண்கள் முன்னேற்றம் பற்றிய தன்னம்பிக்கை கொடுத்த முறையிலும் கனா அற்புதமான படைப்பு என்று பதிவிட்டிருக்கிறார்.