விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thala Ajith Starrer Nerkonda Paarvai Teaser Releasing on May 1 or Not Details Here

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.ரங்கராஜ் பாண்டே,டெல்லி கணேஷ்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thala Ajith Starrer Nerkonda Paarvai Teaser Releasing on May 1 or Not Details Here

மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்று டீஸர் வெளியிட வாய்ப்பிருக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.தற்போது நம்பத்தக்க வட்டாரங்களிடம் கிடைத்த தகவலின்படி டீஸர் மே 1 அன்று வெளியாகாதாம்.எப்போதும் போல் அஜித் தனது பிறந்தநாளை ஆரவாரமில்லாமால் கொண்டாடுவார் என்று தெரிகிறது.

Thala Ajith Starrer Nerkonda Paarvai Teaser Releasing on May 1 or Not Details Here

இருந்தாலும் படக்குழுவினர் ரசிகர்களை ஏமாற்றாமல் எதாவது ஒரு இன்ப அதிர்ச்சி தருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Thala Ajith Starrer Nerkonda Paarvai Teaser Releasing on May 1 or Not Details Here