தமிழ் திரைதுறையில் நடிகர் எனும் அந்தஸ்த்தை தாண்டி நல்ல மனிதர் எனும் பெயரை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமல்லாமல் கார் பந்தயம், விமான வடிவமைப்பு, கேமரா போன்ற பிற செயல்களிலும் முழுவதாக ஈடுபட்டு அதில் வெற்றி காண்பவர் நம் தல. 

Thala Ajith Spotted In Sports Look In White TShirt In Gun Shoot

போனி கபூர் தயாரிப்பில் H. வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் கமிட் ஆகியிருக்கும் அஜித் படப்பிடிப்பு இல்லாததால், துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடக்கும் இடத்தில் காணப்படுகிறார்.

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின் போது கூட துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது கூடுதல் தகவல். பைக் ரேசிங், கார் பந்தயம், ஏரோ மாடலிங், கேமராவை தொடர்ந்து தற்போது துப்பாக்கி சுடுதல். எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் தன்னுடைய முழு அர்ப்பணிப்பை செலுத்தும் தல அஜித்தை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.