திரையுலகில் ரசிகர்களின் ஆதர்ஷ நாயகனாக திகழ்பவர் தல அஜித். எந்தத் திரையுலக விழாக்களிலும் தல அஜித் கலந்து கொள்வதில்லை. படப்பிடிப்புத் தளங்கள், நெருங்கிய நண்பர்களின் விழாக்கள் ஆகியவற்றில் மட்டுமே கலந்து கொள்வார். அதிலும் அவருடைய குடும்பத்தினரின் புகைப்படங்கள் வெளியாவது என்பது மிகவும் அரிது.

தற்போது திருமண விழா ஒன்றில் அஜித்தின் குடும்பத்தினர் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் இல்லை என்றாலும் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர்ட் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களில் ஆத்விக்கின் குறும்புத்தனமான படங்கள்தான் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இவரை ரசிகர்கள் குட்டி தல என்றே அழைத்து வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் அனைவரும் பகிர்ந்து Kutty Thala என்று குறிப்பிட்டதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது அஜித் பைக் பயணத்தில் இருப்பதால் இந்தத் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. நீண்ட தூர பைக் பயணத்தை முடித்தவுடன், வலிமை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை.

வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது. 

வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அஜித் அண்மையில் வாரணாசிக்கு சென்றது தெரிய வந்தது. தொப்பி, மாஸ்க் அணிந்து சுற்றுலாப் பயணி போன்று ஜாலியாக வாரணாசியை சுற்றிப் பார்த்திருக்கிறார் தல. சாட் கடைக்காரருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் சில நாட்கள் முன்பு வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.