தல அஜித் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் தல 59.இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.இவர் தான் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

Thala 60 Director Yet to be Confirmed Dont Believe in Rumours Says Sources Close to Ajith

போனி கபூர் ஒரு பேட்டியில் தன்னிடம் எகிப்திய படம் ஒன்றின் ரீமேக் உரிமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து இது தல 60 படமாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிவா இந்த படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்தது.

இந்த தகவலை உறுதி செய்ய அஜித் தரப்பில் கேட்ட பொழுது இந்த செய்தி முற்றிலும் பொய் என்றும்.ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.எனவே தல அஜித்தின் 60வது படத்தை யார் இயக்குவார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.