மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிந்துபாத் படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறார்.இதனை தவிர மாமனிதன்,சங்கத்தமிழன்,க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

Thadam Director Makes His Acting Debut With Makkal Selvan Vijay Sethupathi Next Movie

இதனை தொடர்ந்து VSP 33 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார்.அமலா பால் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இவர் முதல்முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thadam Director Makes His Acting Debut With Makkal Selvan Vijay Sethupathi Next Movie

சந்திரா ஆர்ட்ஸ் பேனர் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் ஷூட்டிங் பழனியில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தடையற தாக்க,மீகாமன்,தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

Thadam Director Makes His Acting Debut With Makkal Selvan Vijay Sethupathi Next Movie