தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்.. – உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் தகவல் உள்ளே..

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகர் வைரல் பதிவு இதோ - Tenet Actor Denzil smith on board for leo movie | Galatta

இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு இந்திய அளவு தனி எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பிலிருந்தே அதிகரித்து வருகிறது. தளபதி விஜயின் 68 வது திரைப்படமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா விஜய் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு பீஸ்ட் திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு செய்ய ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புறம் உயர ஒருபுராஜ் லியோ திரைப்படத்தின் திரைப்பட வியாபாரம் உயர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் லியோ படத்தில் அனிருத் இசையில் பாடல் காட்சிகள் பிரம்மாண்டமாய் படமாகி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் பிரபல நடிகர் டென்சில் ஸ்மித் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் இவரது காட்சிகள் படமாகி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த தகவல்களை தளபதி ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே எதிர்பாராத கூட்டணியில் பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது மெலும் அவரது நடிகர்கள் பட்டியலை அதிகரித்து கொண்டு செல்கிறார். இப்படத்தில் டென்சில் ஸ்மித் நீதிபதியாக நடித்திருபதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் டென்சில் ஸ்மித், பிரபல பாலிவுட் நடிகர். ஏறத்தாழ 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராகவும் பல ஆங்கில திரைப்படங்கள் மற்றும் இதர மொழி திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் பயணித்து பிரபலமான இவர் சமீபத்தில் வெளியாகி உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் படமான டெனட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் அவர்களை திருமணம் செய்யவிருக்கும் சசிகுமார் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள் – விவரம் உள்ளே..
சினிமா

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் அவர்களை திருமணம் செய்யவிருக்கும் சசிகுமார் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள் – விவரம் உள்ளே..

 “நான் பண்ண தப்புக்கு நடுரோட்டில் நின்னேன்..” முதல் முதலில் ஈரோடு மகேஷ் பகிர்ந்த தகவல் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“நான் பண்ண தப்புக்கு நடுரோட்டில் நின்னேன்..” முதல் முதலில் ஈரோடு மகேஷ் பகிர்ந்த தகவல் – வைரல் வீடியோ உள்ளே..

முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை.. ஏ.வி.எம் பாரம்பரிய மியூசியத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை.. ஏ.வி.எம் பாரம்பரிய மியூசியத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..