பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் அவர்களை திருமணம் செய்யவிருக்கும் சசிகுமார் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள் – விவரம் உள்ளே..

விரைவில் வருண் தேஜ் திருமணம் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் விவரம் உள்ளே - Varun tej getting engaged lavanya tripathi | Galatta

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் பிரபல நடிகருமான நாகேந்திர ராவ் அவர்களின் மகன் வருண் தேஜ் பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளார். கடந்த 2000 ல் தெலுங்கு திரைத்துறையில் வெளியான திரைப்படம் முகுந்தா மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வருண் தேஜ். பின் தொடர்ந்து தெலுங்கில் கஞ்சே, லோபர், மிஸ்டர்,கட்டலகொண்டா கணேஷ், காணி ஆகிய திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராய் வருண் தேஜ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் ரசிகர்களால மெகா பிரின்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார். தனித்துவமான நடிப்பிலும் ஸ்டைலான உடல் மொழியினால் தனக்கென தனி ரசிகர் கூட்டதையே உருவாக்கி வைத்து உள்ளார் வருண் தேஜ் தற்போது இவர் கண்டிவதாரி அர்ஜுனா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில் ஸ்பை திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை இயக்குனர் பிரவின் சட்டரு இயக்கி வருகிறார். இப்படத்தில் வருண் தேஜ் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாக்ஷி வைத்தியா நடித்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் வருண் தேஜ் பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகை லாவண்யா திருப்பாதி அவர்களை திருமணம் செய்யவுள்ளார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த வருண் தேஜ் லாவண்யா வரும் ஜூன் மாதம் 9 ம் தேதி  ஹைதராபாத்தில் இருவருக்கும் நிச்சயம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வருண் தேஜ் மற்றும் லாவண்யா அவர்களின் திருமண வாழ்விற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணம் நடைபெறும் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  

லாவண்யா திருப்பாதி தெலுங்கு திரையுலகில் அண்டாலா ரக்ஷனி திரைப்படம் மூலம் கதாநாயாகியாக அறிமுகமான லாவண்யா தமிழில் சசிக்குமார் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘பிரம்மன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரையிலகில் இவருக்கு வாய்ப்பு குவிய தொடர்ந்து பல அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் அடுத்ததாக சிவி குமார் தயாரித்து இயக்கிய ‘மாயவன்’ திரைப்படத்தில் நடித்தார் மேலும் வருண் தேஜ் அவர்களுடன் லாவண்யா 2 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர் தற்போது தமிழில் 'தணல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசம்.. உற்சாகத்தில் 'ஆதிபுருஷ்' ரசிகர்கள்.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு .. முழு விவரம் உள்ளே..
சினிமா

10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசம்.. உற்சாகத்தில் 'ஆதிபுருஷ்' ரசிகர்கள்.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு .. முழு விவரம் உள்ளே..

டாக்ஸி ஓட்டும் காதல் கொண்டேன் ஆதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகி வரும் பதிவு இதோ..
சினிமா

டாக்ஸி ஓட்டும் காதல் கொண்டேன் ஆதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகி வரும் பதிவு இதோ..

கொலை.. கடத்தல்.. கிரைம்.. மிரட்டும் காட்சியை வெளியிட்ட அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

கொலை.. கடத்தல்.. கிரைம்.. மிரட்டும் காட்சியை வெளியிட்ட அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..