கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

Tamil Youtubers Come Together For a Song Shoot in RIo Film Under Sivakarthikeyan Productions

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

Tamil Youtubers Come Together For a Song Shoot in RIo Film Under Sivakarthikeyan Productions

இந்த பாடலில் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த அனைத்து Youtube பிரபலங்களும் இடம்பெற்றிருந்தனர்.இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நாயகன் ரியோ விரைவில் வெயிட்டா ஒன்னு வருது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.