ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி படத்தில் இணைந்த தமன்னா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி படத்தில் இணைந்த தமன்னா,tamannah joined her next bollywood movie vedaa | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த புதிய திரைப்படமாக பாலிவுட்டில் தயாராகும் அதிரடி திரைப்படத்தில் நடிகை தமன்னா இணைந்து இருக்கிறார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா கடந்த 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த F3- Fun and Frustration  மற்றும் குருதுண்டா சீதாக்களம் ஆகிய படங்களிலும் ஹிந்தியில் வெளிவந்த பப்லி பௌன்சர் மற்றும் பிளான் ஏ பிளான் பி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் சமீபத்தில் நேரடியாக NETFLIX தளத்தில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 எனும் ஆந்தாலஜி படத்தில் செக்ஸ் வித் எக்ஸ் என்ற எபிசோடில் நடித்த தமன்னா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதை அடுத்து வரிசையாக அடுத்தடுத்து தமன்னா நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் போலா ஷங்கர் திரைப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு தமன்னா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பக்கா டார்க் காமெடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தற்சமயம் மலையாளத்தில் தயாராகி வரும் பாந்தரா திரைப்படத்தில் நடிகர் திலீப் உடன் இணைந்து நடித்திருக்கும் நடிகை தமன்னா இந்த பாந்த்ரா திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் முதல் முறை நடிகையாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி-யின் ஃபேவரட் சீரிஸான அரண்மனை சீரிஸின் நான்காவது பாகமாக தயாராகும் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக்கும் வேதா திரைப்படத்தில் தமன்னா தற்போது இணைந்து இருக்கிறார். பாலிவுட் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகும் இந்த வேதா திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து சர்வாரி வாக் கதையின் நாயகியாக நடிக்கும் இந்த வேதா திரைப்படத்தில் நடிகை தமன்னா தற்போது மிக முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. இது குறித்து படப்பிடிப்பு தளத்தில் நடிகை தமன்னா இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வேதா திரைப்பட குழு தமன்னா இணைந்தது குறித்து முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வேதா படத்தில் நடிகை தமன்னா இணைந்தது பற்றி வெளிவந்திருக்கும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

Thrilled and grateful to embark on this exciting new journey with the #Vedaa family for a very special role!
Can’t wait to work alongside this amazing cast and crew. 💫 pic.twitter.com/g0eZOHAcZN

— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 13, 2023

சந்தானத்தின் ஹாரர் காமெடி ட்ரீட்டாக வரும் DD ரிட்டன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... கலக்கலான புது GLIMPSE இதோ!
சினிமா

சந்தானத்தின் ஹாரர் காமெடி ட்ரீட்டாக வரும் DD ரிட்டன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... கலக்கலான புது GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் உருவான விதம்... ரஜினிகாந்த் - தமன்னாவின் ஃட்ரெண்டாகும் மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் உருவான விதம்... ரஜினிகாந்த் - தமன்னாவின் ஃட்ரெண்டாகும் மேக்கிங் வீடியோ இதோ!

நெல்சன்-அருண் மாதேஸ்வரன் வரிசையில் மீண்டும் தமிழ் இயக்குனருடன் சிவராஜ்குமார்... கேப்டன் மில்லர் தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!
சினிமா

நெல்சன்-அருண் மாதேஸ்வரன் வரிசையில் மீண்டும் தமிழ் இயக்குனருடன் சிவராஜ்குமார்... கேப்டன் மில்லர் தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!