இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா அடுத்ததாக பப்ளி பவுன்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்கார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்கிளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

முன்னதாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா தெலுங்கில் விரைவில் வெளிவரவுள்ள குருதுண்டா சீதாக்களம் மற்றும் F3 ஆகிய படங்களிலும் நடிகை நடித்துள்ளார். மேலும் தமன்னா நடிப்பில் பாலிவுட்டில் போலே சுடியான் மற்றும் பிளான் ஏ பிளான் பி ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட முன்னணி மொழி திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்தும், டான்ஸராக சில படங்களின் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் தமன்னா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.இந்த வரிசையில் தமன்னா நடித்து நடனமாடியுள்ள தபாஹி எனும் ஹிந்தி பாடல் தற்போது வெளியானது.

 ஹிந்தியில் பிரபல சுயாதீன இசைக்கலைஞர் பாட்ஷா முன்னதாக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து உருவாக்கிய டாப் டக்கர் பாடல் தென்னிந்தியாவிலும் மிகப் பிரபலமடைந்த நிலையில் தற்போது நடிகை தமன்னாவுடன் பாட்ஷா இணைந்து  உருவாகியுள்ள இந்த தபாஹி பாடலும் தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. துள்ளலான அந்த தபாஹி பாடல் வீடியோ இதோ…