தெலுங்கு திரை உலக ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் விளங்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலா ஷங்கர் படத்திலும் சிரஞ்சீவி தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் படத்தில் நடித்துவரும் சிரஞ்சீவி, சலோ மற்றும் பீஷ்மா ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் #Chiru156 புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்

முன்னதாக இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் நடிகர் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளாதாக தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக சில அறிவிக்கப்பட்டது.

இந்த வரிசையில் அடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் #MEGA154 திரைப்படத்திலும் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.