ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, இயேசுவின் திருவுருவச் சிலை 2 ஆம் உலக போருக்கு பின் முதன் முறையாக மறைவான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ள சம்பவம், உலக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாம் உலகப்போரை, இந்த உலகம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அந்த இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இழப்புகள் மற்றும் அவ்வளவு அதிகம்.

அதன் பிறகு தான், “இனி, 3 ஆம் உலக போர் என்ற ஒன்று வந்தால், அதன் பிறகு இந்த உலகமே இருக்காது” என்ற கருத்தும் உலகம் முழுவதும் முன் வைக்கப்பட்டது.

அதன் பிறகு “இனி போர் என்ற ஒன்று நடைபெறவே கூடாது” என்று உருவாக்கப்பட்டது தான் ஐ.நா அமைப்பு. ஆனாலும், போர் என்ற அந்த ஒற்றை வார்த்தை மட்டும் ஓயாமல் வந்துகொண்டே இருக்கிறது.

அந்த வகையில், தற்போது 3 ஆம் உலக போருக்கு வழி வகுக்க கூடிய “ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது.

அதன் படி, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்றுடன் 13 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் நாடு மிக பெரிய அளவில் பாதிப்பினை சந்தித்து உள்ளது. இதில், உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி இருக்கிறது.

இந்த போல், உக்ரைன் நாட்டை விட்டு, கிட்தட்ட 17 லட்சம் பேர் வெளியேறி அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்து வருவதாகவும் ஐ.நா. சபை கூறியுள்ளது. 

இந்த நிலையில் தான், 2 ஆம் உலக போருக்கு பிறகு முதன் முறையாக உக்ரைனின் வீவ் நகரில் இருந்து இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையை, மறைவான ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

அதாவது, உலக நாடுகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு பகுதியினர், இரு வேறு பிரிவுகளாக பிரிந்து, கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 2 ஆம் உலக போரை நடத்தினர். 

இந்த போர் நடைபெற்ற போது, உக்ரைனின் வீவ் நகரில் இருந்த ஆர்மீனியன் தேவலயத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையானது, குண்டுவீச்சு உள்ளிட்ட பெரும் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அந்த ஆலயத்தில் இருந்து எடனடியாக எடுக்கப்பட்டு, அங்குள்ள ஒரு மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அதன் பிறகு, 2 ஆம் உலக போர் முடிந்த பிறகு, மீண்டும் இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டது.

அந்த வகையில், உலக அளவில் 2 வது இடத்தில் ராணுவ பலங்களை கொண்ட ரஷ்ய ராணுவம், 22 வது இடத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் மீது கடந்த 13 நாட்களாக  தொடர்ச்சியா போரில் ஈடுபட்டு மிக கடுமையாக தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைன் ராணுவம் தனியாளாக அதனை எதிர்கொண்டு வருகிறது.  

எனினும், ரஷ்யாவின் தாக்குதலால், உக்ரைன் தங்கள் நாட்டிற்கு சொந்தமான பல பகுதிகளை இழந்து உள்ளதால், அங்கு கிட்டதட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட் சேதம் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, 2 ஆம் உலக போருக்கு பிறகு தற்போது உக்ரைன் நாட்டில் முதன் முறையாக உக்ரைனின் வீவ் நகரில் இருந்து இயேசு கிறிஸ்துவின் சிலையை மறைவிடத்திற்கு கொண்டு சென்று, மிகவும் பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

இந்த செய்தியை, கிழக்கு ஐரோப்பிய ஊடக அமைப்பு நெக்ஸ்டா இன்று அதிகார பூர்வமாக தெரிவித்து உள்ளது. அத்துடன், இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.