சூப்பர் ஸ்மார்ட் கார்த்தி...சர்தார் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !
By Aravind Selvam | Galatta | March 08, 2022 22:13 PM IST

கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் அடுத்து நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன்,விருமன் படங்களின் படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார்.
இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,சிம்ரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.சர்தார் படத்தின் படப்பிடிப்பில் ஜனவரி மாதம் முதல் கலந்துகொண்டு வருகிறார் கார்த்தி.தற்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Exclusive new stills from #Karthi's #Sardar! 💥@Karthi_Offl @Psmithran @Prince_Pictures @gvprakash @rajishavijayan @RaashiiKhanna_ #Munishkanth @george_dop @AntonyLRuben @KKadhirr_artdir @dhilipaction pic.twitter.com/uAFsL82PCD
— Galatta Media (@galattadotcom) March 8, 2022
02/03/2017 01:00 PM
The Sardar who "died" for Rajinikanth!
05/01/2008 12:00 AM
Sardar Chinnapa Reddy in full swing
14/10/2006 12:00 AM