தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து அதில் முழுமூச்சில் ஈடுபட்டு அசத்துபவர் நடிகர் சித்தார்த். சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் என அடுத்தடுத்து இரண்டு ரிலீஸ் தந்து பட்டையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 , சைத்தான் கா பச்சா போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டக்கர். 

takkar

இந்த படத்தை கப்பல் புகழ் இயக்குனர் கார்த்தி ஜி.கிரிஷ் இயக்குகிறார். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். 

takkar

படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் ரிலீஸ் தேதி வெளியானது. ஏப்ரல் 17-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.