புரியாத புதிர் மற்றும் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக திகழ்பவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இவரின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

bindhumadhavi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் STR இணைந்து இன்று இவரது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இப்படத்திற்கு யாருக்கும் அஞ்சேல் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கிறது. 

yaarukumanjel

படம் குறித்த மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கழுகு 2 படத்திற்கு பிறகு பிந்து மாதவி நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை விரும்பிகள்.