ஒரு நாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மான்ஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்தப் படத்தை மாயா, மாநகரம் படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Tabakunu Lyric Video Song Released Featuring SJ Surya In Lead

இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

Tabakunu Lyric Video Song Released Featuring SJ Surya In Lead

படத்தின் டீஸரை தொடர்ந்து தற்போது டபக்குனு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. யுகபாரதியின் வரிகளில் ஜே ராக் பாடியுள்ளார்.