34 வயதான பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.இது இந்தியா சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Sushant Singh Rajput Sister In Law Passed Away

சுஷாந்த் சிங்கின் இறுதி சடங்கு நேற்று மும்பையில் நடைபெற்றது.அவரது தந்தை உட்பட உறவினர்கள் சிலர் முன்னிலையில் இந்த இறுதி சடங்கு நடைபெற்றது.மும்பையில் சுஷாந்தின் இறுதிச்சடங்கு நடந்துகொண்டிருந்த அதே வேளையில் அவரது உறவினர் ஒருவர் பீகாரில் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

Sushant Singh Rajput Sister In Law Passed Away

பீகாரில் சுஷாந்த் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரரின் மனைவி சுதாதேவி ,சுஷாந்த் சிங் இறந்த செய்தி கேட்டதில் இருந்தே மன வருத்தத்தில் இருந்துள்ளார்.அவர் கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுதாதேவி மரணமடைந்துள்ளர்.ஏற்கனவே சுஷாந்த் இறந்த சோகத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக வந்துள்ளது.

Sushant Singh Rajput Sister In Law Passed Away