கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

Shooting And Post Production Works To be Stopped From June 19 Announces FEFSI

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 30 அமல்படுத்தப்படவுள்ளது.இதற்கு முந்தைய ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள், சின்னத்திரை சீரியல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் பாதுகாப்பு உபகாரங்களோடும்,குறிப்பிட்ட அளவுடைய ஆட்களோடும் நடத்த அனுமதித்திருந்தனர்.

Shooting And Post Production Works To be Stopped From June 19 Announces FEFSI

தற்போது வரும் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு போடப்படவுள்ளதால் சினிமா,சின்னத்திரை,சீரியல் வேலைகள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.இதனை அடுத்து புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு மேலும் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.