கடந்த வரும் தீபாவளி பலகாரமாய் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவான இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியிருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்தது. ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகிபாபு, நயன்தாரா, வர்ஷா பொல்லமா, ரெபா மோனிகா ஜான், இந்திரஜா ஷங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்தார். 

பிகில் படத்தின் கிரியேட்டிவ் ப்ரோடியூசரான அர்ச்சனா கல்பாத்தி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேசுகையில், சுவாரஸ்யமான ஒரு தகவலை தெரிவித்தார். பிகில் படத்தின் ராயப்பன் கேரக்டர் உருவாக முக்கிய காரணமே மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தானாம். 

ஆரம்பத்தில் ராயப்பன் கேரக்டருக்கு சீனியர் நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருந்தார்களாம். அந்த நேரத்தில் மும்பையை சேர்ந்த காஸ்மெட்டாலஜிஸ்ட் ப்ரீத்தி, சிச்சோரே படத்தில் சுஷாந்த் சிங் நடித்த இரண்டு லுக்கையும் காண்பிக்க, சுஷாந்த் சிங் மாதிரியே  தளபதியை இரண்டு கேரக்டரில் நடிக்க வைக்கவேண்டும் என்ற யோசனை வந்ததாம். பின் தளபதியிடன் கூறி ராயப்பன் லுக் டெஸ்ட்டை எடுத்தார்களாம். 

இதுவரை வயதான தோற்றத்தில் நடித்திடாத விஜய், அந்த கேரக்டரை ரசித்து செய்தாராம். படம் வெளியான பிறகும் அந்த பாத்திரம் அற்புதமான வரவேற்பை பெற்றது. ராயப்பன் கேரக்டரை வைத்து மட்டுமே பிகில் இரண்டாம் பாகத்தை தயார் செய்யுங்கள் என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். பிகில் படத்தில் தோன்றிய ராயப்பனின் மாஸ் கண்ணிலே இருக்கும். பொறுப்புள்ள தந்தையாகவும், சமாதானபுர மக்களை காக்கும் வீரனாகவும் பட்டையை கிளப்பியிருப்பார் தளபதி. நரைத்த முடியுடன், திக்கி பேசும் தோரணையுடன் அந்த கேரக்டராகவே ஈர்த்திருப்பார் தளபதி.